முதல்-அமைச்சர் இன்று தர்மபுரி வருகை ஜெயலலிதா சிலை திறப்பு விழா- பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) தர்மபுரி வருகிறார். அவர் ஜெயலலிதா சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

Update: 2019-02-24 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 7½ அடி உயர முழு உருவ வெண்கல சிலை அமைக்கப் பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது.இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங் கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஜெயலலிதாவின் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரூரில் இன்று மாலை 6 மணிக்கு நடை பெறும் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்திற்கு மாவட்ட வக்கீல் பிரிவு துணை தலைவர் ஆர்.ஆர்.பசுபதி தலைமை தாங்குகிறார்.

தமிழக முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. இணை ஒருங் கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட , ஒன்றிய, நகர, பேரூராட்சி ஊராட்சி, நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டு கிறேன். இவ்வாறுஅந்த அறிக்கையில் அமைச்சர் கூறியுள்ளார்.

இதனிடையே தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. அலுவல கத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கும் பணியை அமைச்சர் கே.பி. அன்பழகன் பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஆவின் தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.சிங்காரம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், நிர்வாகிகள் தகடூர் விஜயன், செந்தில்குமார், அங்கு ராஜ், பொன்னுவேல், மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்