தர்மபுரி அருகே வைக்கோல் ஏற்றி வந்த சரக்கு வேனில் திடீர் தீ டிரைவர் படுகாயம்
தர்மபுரி அருகே வைக்கோல் ஏற்றி வந்த சரக்கு வேனில் திடீரென தீப்பிடித்தது. இதில் டிரைவர் படுகாயமடைந்தார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கிரி(வயது 26). இவர் சரக்கு வேன் வைத்து உள்ளார். இவரே டிரைவராகவும் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வைக்கோலை தனது சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு இண்டூருக்கு சென்றார். அங்கு பாதி வைக்கோலை இறக்கிய பின்னர் மீதமிருந்த வைக்கோலுடன் தர்மபுரியை அடுத்த வெண்ணாம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார்.
வெண்ணாம்பட்டி அருகே வந்தபோது சரக்கு வேனில் இருந்த வைக்கோலில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் மளமளவென தீ பரவி எரியத்தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிரி வேனில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தீயணைப்பு படையினருக்கு அவர் தகவல் கொடுத்தார். இந்த நிலையில் வைக்கோல் போரில் பற்றிய தீ கரும்புகையுடன் பரவி எரிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் சரக்கு வேனின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் வைக்கோல் போர் முற்றிலுமாக எரிந்தது. அந்த சரக்கு வேனும் தீயில் கருகியது. சாலையில் இருந்த மின்சார வயரில் வைக்கோல் போர் உரசியதால் தீப்பிடித்ததா? வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.