தளபதியாக நானும், போர்வாளாக வைகோவும் “தமிழகத்தை காப்பாற்ற ஒன்று சேர்ந்துள்ளோம்” மு.க.ஸ்டாலின் பேச்சு
தளபதியாக நானும், போர்வாளாக வைகோவும், தமிழகத்தை காப்பாற்ற ஒன்று சேர்ந்துள்ளோம் என திருச்சியில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருச்சி,
ம.தி.மு.க. சார்பில் கலைஞர் புகழ் போற்றும் விழா மற்றும் ம.தி.மு.க. உயர்நிலை குழு உறுப்பினர் வக்கீல் வீரபாண்டியன் எழுதிய ‘தமிழின் தொன்மையும் சீர்மையும்-கலைஞர் உரை’ என்ற நூல் வெளியீட்டு விழா திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று இரவு நடந்தது. விழாவுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கி பேசினார். விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீரபாண்டியன் எழுதிய நூலை வெளியிட முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. பெற்றுக்கொண்டார். விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கலைஞரின் மறைவுக்கு பின்னர் தொடர்ந்து எந்நாளும் அவரது புகழுக்கு அஞ்சலி செலுத்தும் விழாக்கள் நடந்து கொண்டிருக்கிறது. ம.தி.மு.க. சார்பில் நடைபெறுகிற இந்த விழாவில் தி.மு.க. தலைவராக நான் (மு.க.ஸ்டாலின்) இங்கு நிற்கிற போது என் நினைவு எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. கலைஞருக்கு ம.தி.மு.க. சார்பில் தமிழ் வேந்தல் விழாவா? வைகோ அருகில் மு.க.ஸ்டாலினா? என சிலருக்கு சந்தேகமல்ல, பொறாமை. கோபமாக கூட இருக்கலாம்.
திராவிட இயக்கங்கள் ஒன்று சேர்ந்தால் சிலருக்கு பிடிக்கவே பிடிக்காது. அந்த வயிற்றெரிச்சலில் தான் விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இங்குள்ள தமிழர்கள் ஒன்றானால் நம்முடைய எதிரிகள் எதுவும் செய்ய முடியாது. நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. இங்கு தளபதி என அடையாளம் சூட்டப்பட்ட நான் (மு.க.ஸ்டாலின்). போர்வாள் என கலைஞரால் அடையாளம் காட்டப்பட்டவர் வைகோ. தளபதியும், போர்வாளும் ஒரே மேடையில். தளபதியும், போர்வாளும் இணைந்திருப்பது திராவிட இயக்கங்களை காப்பாற்றுவதற்காக. இந்த இனம், மொழி, தமிழகத்தை காப்பாற்றுவதற்காக ஒன்றுசேர்ந்துள்ளோம்.
கலைஞர் வயதின் முதிர்வால் உடல் நலம் பாதிக்கப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் ஓரிரு ஆண்டுகள் ஓய்வெடுத்த போது, கலைஞரை சந்திக்க வைகோ நேரம் கேட்டார். வைகோ வந்து கலைஞரை பார்த்தார். அப்போது வைகோவை பார்த்து கலைஞர் புன்முறுவல் செய்தார். எத்தனை ஆண்டு கால நட்பு அது. கலைஞருக்கு தொண்டர்களின் தொண்டராக இருந்தவர் தான் வைகோ. கலைஞரின் கையை அழுது கொண்டே பிடித்து வைகோ தடுமாறினார். கலைஞரும், வைகோ கையை பிடித்துக்கொண்டார்.
அந்த சோக நிலையிலும் கலைஞரிடம், ‘அண்ணா உங்களுக்கு நான் எப்படி இருந்தேனோ அதேபோல ஸ்டாலினுக்கும் என் வாழ்நாள் முழுவதும் உடன் இருப்பேன்’ என்று கூறினார். ஒரு முறை அல்ல பல முறை கூறினார். நீங்கள் (வைகோ) எனக்கு துணையாக இருப்பது மட்டுமல்ல, நானும் உங்களுக்கு துணையாக இருப்பேன். (இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறிய போது குரல் தழு தழுத்தது, கண்களில் நீர் தழும்பியது. அதே நேரத்தில் மேடையில் அமர்ந்திருந்த வைகோவும் கண்ணீர் விட்டு அழுதார். கைக்குட்டையால் கண்ணீரை துடைத்தபோதும் அழுது கொண்டே இருந்தார்.)
கடந்த 30 ஆண்டு காலமாக தமிழகத்திற்கு கேடு விளைவிக்க கூடிய சூழலில் தொடர் போராட்டம் நடத்தி கொண்டிருப்பவர் வைகோ. அந்த போராட்டங்களுக்கு நான் உறுதியாக துணை நிற்பேன். ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்காக அவர் நடத்திய போராட்டம் எல்லோருக்கும் தெரியும். சட்ட போராட்டமாக இருந்தாலும் வைகோவால் மட்டுமே முடியும். முல்லை பெரியாறு அணை, நியூட்ரினோ போராட்டங்கள், நெல்லை முதல் சென்னை வரை நடைபயணங்கள் என தமிழக அரசியலில் யாராலும் நடத்திட முடியாது. தமிழாய் வாழ்ந்தவர் கலைஞர். கலைஞருக்கு இன்னொரு பெயர் என்றால் தமிழ்.
கலைஞரின் திருக்குறள் உரை வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் நடந்த போது திருக்குறளுக்கு யாரெல்லாம் உரை எழுதியிருக்கிறார்கள் என அடுக்கி காட்டி வைகோ பேசிய போது அரங்கமே அதிர்ந்தது. அந்த அளவுக்கு உணர்ச்சியோடு அவர் பேசியதை நான் எண்ணி பார்க்கிறேன். மிசா காலத்தில் ஓராண்டு காலம் நான் சென்னை சிறையில் இருந்தேன். வைகோ பாளை சிறையில் இருந்தார். சிறையில் இருந்த என்னை ஊக்கப் படுத்தி, உற்சாகப்படுத்தி வைகோ கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை படித்த பிறகு என்னையே அறியாமல் தொடர்ந்து இந்த இயக்கத்திற்கு பணியாற்றிட வேண்டும், பாடுபட வேண்டும், கடமையாற்றிட வேண்டும் என்ற உந்து சக்தியாக அந்த கடிதத்தில் இருந்த ஒவ்வொரு வரியும் எடுத்து காட்டியிருக்கிறது.
பொடா சட்டத்தில் வைகோ கைதாகி இருந்த போது பூந்தமல்லி நீதிமன்றத்திற்கே கலைஞர் நேரில் சென்றார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அங்கு சென்றும் பார்த்தார். நான் கூட அந்த நேரத்தில் கூட்டணி ஏற்பட்ட போது சிறையில் சென்று பார்த்திருக்கிறேன். தற்போது கூட்டணி ஏற்பட்ட நேரத்தில் இந்த மேடைக்கு நான் வந்திருக்கிறேன். அப்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாங்க வந்தேன். தற்போது கூட்டணி ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்து போடுங்கள் என சொல்ல நான் வந்திருக்கிறேன். பொடா சட்டத்தில் கைதாகி இருந்த வைகோவை, ‘தேவையில்லாமல் நீ சிறையில் இருக்கிறாய். உன்னுடைய பணி நாட்டிற்கு தேவை. ஜாமீனில் உடனடியாக வெளியே வர வேண்டும்’ என அவரது கைகளை பிடித்து கலைஞர் உத்தரவிட்டு வந்தார். அதற்கு பிறகு அந்த உத்தரவை என்றும் வைகோ தட்டியது கிடையாது. நாங்கள் கூட மீறியிருக்கிறோம். ஆனால் வைகோ மீறியது இல்லை.
கலைஞரின் உத்தரவை ஏற்று வைகோ வெளியில் வந்தார். கடந்த 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் 40 தொகுதிகளிலும் வைகோ தேர்தல் பிரசாரம் செய்தார். அதேபோல வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளார். அந்த புயல் வேக பிரசாரத்திற்கு அவர் தயாராகி விட்டார். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, திராவிட இயக்கங்களின் அடிப்படை லட்சியங்களான சமூக நீதி, சமத்துவம், சமதர்மம், பகுத்தறிவு மதசார்பின்மை ஆகிய கொள்கைகளை காப்பாற்றுவதற்காக இந்த பயணம். இந்த கொள்கைகளுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகளால் பல ஆபத்துகள் தொடந்து வந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆபத்துகளை எதிர்த்து திராவிட இயக்கங்களின் தளபதிகளும், போர்வாளும் ஒன்று சேர்வோம். வென்று காட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.