நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் தஞ்சையில் நடந்த தி.க. சமூகநீதி மாநாட்டில் தீர்மானம்
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று, தஞ்சையில் நடந்த தி.க. சமூக நீதி மாநாட்டில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர்,
திராவிடர் கழகத்தின் சார்பில் தஞ்சையில் 2 நாட்கள் மாநாடு நடைபெற்றது. முதல்நாள் திராவிடர் கழக மாநில மாநாடும், 2-வது நாளான நேற்று சமூக நீதி மாநாடும் நடைபெற்றது. மாநாட்டுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அமர்சிங் வரவேற்றார்.
அம்பேத்கர் படத்தை பேராசிரியர் காளிமுத்துவும், அண்ணா படத்தை ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான், காமராசர் படத்தை இந்திய சமூக நீதி இயக்க தலைவர் எஸ்றா.சற்குணம், கலைஞர் படத்தை கர்நாடக மாநில பிற்பட்டோர் ஆணையம் தலைவர் காந்தராஜா ஆகியோர் திறந்து வைத்தனர். மாநாட்டை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடங்கிவைத்தார்.
இதைத்தொடர்ந்து தீர்மான அரங்கம், மகளிர் கருத்தரங்கம் ஆகியவை நடந்தது. மாலையில் மாநாட்டு நிறைவரங்கம் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகிதின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த அருணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாகிருல்லா ஆகியோர் பேசினர். கி.வீரமணி நிறைவுரையாற்றினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழகத்தில் உள்ளது போல பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு சட்டத்தை மத்திய அரசிலும் நிறைவேற்ற வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் அனைத்து துறைகளிலும் உரிய பங்கீடு பெற வேண்டுமானால் மண்டல் குழு பரிந்துரை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்பு திட்டமல்ல. வாய்ப்பு மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, அரசின் அனைத்து நிலைகளிலும் பங்குபெற ஏற்பட்ட ஒரு கருவியாகும். இதில் பொருளாதார அளவுகோலை புகுத்தும் கிரீமிலேயர் என்ற கிருமியை ஒழிக்க வேண்டும்.
தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும். சட்டமன்றம் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு கொண்டு வர உடனே சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். நீதித்துறையில் உச்சநீதிமன்றம் வரை இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். இதற்கு ஒரே தீர்வு மீண்டும் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்.
உயர் ஜாதியினருக்கான பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய அனைத்து சமூக அமைப்புகளும் ஒன்றாக நின்று போராடுவது, இந்தி திணிப்பை எதிர்ப்பது, சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.
போதிய அளவு மாணவர்கள் வருவதில்லை என்று கூறி அரசு பள்ளிகளை மூடுவது தவறான அணுகுமுறையாகும். இதனால் கிராமப்புறங்களில் மாணவர்கள் கல்விக்கூடங்களுக்கு செல்வது இடையில் நிற்கும் அபாயம் ஏற்படும். பல்கலைக்கழக ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும். தொடர்ந்து பொதுத்தேர்வுகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். புதிய தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை விலக்கிக்கொண்டு ஏற்கனவே நடைமுறையில் இருந்த மருத்துவ கவுன்சிலின் குறைகளை நீக்கி செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் தஞ்சை மாவட்ட செயலாளர் தி.க. செய லாளர் அருணகிரி நன்றி கூறினார்.