சாராயம் கடத்திய பெண் உள்பட 3 பேர் கைது மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
நாகூரில் சாராயம் கடத்திய பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகூர்,
நாகையை அடுத்த நாகூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் மற்றும் போலீசார், நாகூர் வெட்டாற்று பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். அதில் புதுச்சேரி மாநில சாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார், மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருக்குவளை மருதூர் மெயின் சாலையை சேர்ந்த கணேசன் மகன் ராஜேஷ் (வயது 22) என்பது தெரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மோட்டார் சைக்கிள் பறிமுதல்
இதேபோல, நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் காரைக்கால் பகுதியில் இருந்து, நாகை மருந்து கொத்தள தெருவை சேர்ந்த இளையராஜா (35), அதே பகுதியை சேர்ந்த ராணி (49) ஆகியோர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜா, ராணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த 220 லிட்டர் சாராயத்தையும், மோட்டார்சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.