மருதூர் பேரூராட்சி அலுவலகத்தில் சிறப்பு நிதி ரூ.2 ஆயிரம் பெறுவதற்கு மனு கொடுக்க குவிந்த பொதுமக்கள்
மருதூர் பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி பெறுவதற்கு மனு கொடுக்க குவிந்த பொதுமக்கள் அதி காரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குளித்தலை,
தமிழ்நாடு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங் களுக்கும், குறிப்பாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை தொழிலாளர் குடும்பங் களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதி உதவியாக தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுமென சட்டசபையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து குளித்தலை நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் மூலம் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர் குறித்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் இதற்கென நியமிக்கப்பட்ட அலுவலர்கள் விண்ணப்பத்தை அந்தந்த பகுதிகளுக்கு நேரடியாக எடுத்துச் சென்று விண்ணப்பத்தில் பெயர் குறிப்பிட்டுள்ளவர்களை அழைத்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் தங்கள் பெயர் இல்லை எனக்கூறி குளித்தலை நகர, ஒன்றிய, பேரூராட்சி பகுதிமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் தங்கள் பெயரை இணைக்க விரும்பியவர்கள் அந்தந்த நகராட்சி, ஊராட்சி, ஒன்றிய அலுவலகங்களில் மனு கொடுத்து வந்தனர். அதுபோல் மருதூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு மனு கொடுக்க தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் நேற்றும் மருதூர் பேரூராட்சிகுட்பட்ட ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்தனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்க தனி விண்ணப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதைகேட்ட பொதுமக்கள் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் புதிய விண்ணப்பம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, பொதுமக்கள் மனு கொடுத்தாலும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் குறித்த விவரம் சேகரிக்க அரசு மூலம் புதிய விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தில் பேரூராட்சி அலுவலர்கள் வீடு வீடாக நேரடியாக சென்று பொதுமக்களிடம் விவரம் சேகரிக்க உள்ளனர். இந்த விவரங்கள் அடிப்படையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அந்த பட்டியலில் இணைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.