2 ஆயிரத்து 114 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இளைஞர்கள் ஆர்வம்

மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 114 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இளைஞர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.

Update: 2019-02-23 22:15 GMT
திண்டுக்கல்,

இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இன்னும் ஒருசில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதற்கு சிறப்பு முகாம் நடத்தும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல், ஆத்தூர், பழனி, வேடசந்தூர், நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் மொத்தம் 2 ஆயிரத்து 114 வாக்குச்சாவடி மையங்கள் இருக்கின்றன. அந்த வாக்குச்சாவடி மையங் கள் அனைத்திலும் நேற்று வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இதற்காக வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம், முகவரி மாற்றம் செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் தயாராக வைக்கப்பட்டு இருந்தன. காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை வாக்காளர்கள் வந்து விண்ணப்பம் செய்தனர். அதிலும் இளைஞர்கள் ஆர்வமுடன் வந்து வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பித்தனர்.

மேலும் பலர் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். இந்த சிறப்பு முகாமை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை விடுபட்ட வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொடைக்கானல் பகுதியில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பது குறித்து 35 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது. இதனை நகராட்சி ஆணையாளர் முரு கேசன், தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார் ஜெயராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். இதுகுறித்து தாசில்தாரிடம் கேட்டபோது, புதிய வாக் காளர்கள் சேர்ப்பு குறித்து முகாம் நாளையும் (இன்று) நடைபெறுகிறது என்றார்.

மேலும் செய்திகள்