வருகிற நாடாளுமன்ற, சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வாக்குச்சாவடி முகவர்கள் பணியாற்ற வேண்டும் மு.க.ஸ்டாலின் பேச்சு

வருகிற நாடாளுமன்ற, சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வாக்குச்சாவடி முகவர்கள் பணியாற்றிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2019-02-23 22:45 GMT
ஓசூர், 

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் தின்னூரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:- வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றியை பெரும் என்பதற்கு சாட்சியாக நீங்கள் இங்கு கூடி உள்ளர்கள்.

கடந்த மாதம் நான் மேற்கு வங்க மாநிலம் சென்றிருந்தேன். அங்கு கொல்கத்தாவில் மம்தா பானார்ஜி நடத்திய மாநாட்டில் பங்கேற்றேன். அந்த மாநாடு பிரதமர் மோடியை கண்டித்தும், அவரை பிரதமர் பதவியில் இருந்து அப்புறப்படுத்தும் விதமாக அந்த மாநாடு நடத்தப்பட்டது.

ஓசூர் சட்டமன்ற தொகுதியில் 364 பூத்துகள் உள்ளன. ஒரு பூத்திற்கு 20 தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 5 பேர் பெண்கள், 5 பேர் இளைஞர்கள். மீதம் உள்ளவர்கள் தி.மு.க. நிர்வாகிகள். ஆக மொத்தம் 7 ஆயித்து 280 பேர் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் தலா 20 ஓட்டுகள் நமக்கு பெற்று தந்தால் உறுதியாக இந்த தொகுதியில் நாம் வெற்றி பெற முடியும்.

வருகிற நாடாளுமன்ற மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற வாக்குச்சாவடி முகவர்கள் பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணகிரி செங்குட்டுவன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட துணை செயலாளர் வேப்பனப்பள்ளி பி.முருகன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், மேற்கு மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், ஓசூர் நகர பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன், மேற்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஞானசேகரன், துணை அமைப்பாளர் செந்தில், கட்சி பிரமுகர் ஆனந்தய்யா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாபு, பூனப்பள்ளி ஊராட்சி செயலாளர் மஞ்சுநாதப்பா, பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், பொறியாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்