சேறும்-சகதியுமான தண்ணீரை வடிகட்டி குடிக்கும் பொதுமக்கள் துறையூர் நகராட்சி 19-வது வார்டில் தான் இந்த அவலம்
துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டில் சேறும்-சகதியுமான தண்ணீரைதான் பொதுமக்கள் வடிகட்டி குடித்து வருகிறார்கள்.
துறையூர்,
திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதில், 19-வது வார்டை சேர்ந்தது, மலையப்பன் சாலை பகுதி. இந்த பகுதியில் இதுவரை அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. குறிப்பாக கழிவுநீர் வடிகால், குடிநீர் குழாய்கள் போன்றவை அமைக்கப்படவில்லை.
மலையப்பன் சாலை 12-வது குறுக்கு சந்து, 13-வது குறுக்கு சந்து இணைப்பு சாலை ஆகியவற்றில் சாலை வசதி மற்றும் மின்விளக்கு வசதிகள் இல்லை. நகராட்சி பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாத ஒரே பகுதி இந்த பகுதி என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.
இதுஒருபுறம் இருக்க, மாணவிகள் விடுதி முன்பு காவிரி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 5 நாட்களுக்கு ஒரு முறை வரும் காவிரி குடிநீரை பொதுமக்கள் பிடித்து பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த 5 நாட்களுக்கு முன்பு இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் ஓடிக் கொண்டு இருக்கிறது. இதனால், இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதன் விளைவாக 5 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் ஒரு பகுதிக்கு மட்டும் மாலை 6 மணிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பீறிட்டு வரும் தண்ணீர் அங்குள்ள பள்ளத்தில் குட்டைபோல தேங்கி நிற்கிறது. அந்த சேறும்-சகதியுமான தண்ணீரை பொதுமக்கள் பிடித்து வடிகட்டி குடித்து வருகிறார்கள்.
இதுசம்பந்தமாக நகராட்சி அலுவலகத்தில் பலமுறை தெரியப்படுத்தியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த தண்ணீரை குடிக்கும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த வழியாகத்தான் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். பள்ளி மாணவர்கள் மற்றும் வேறு யாரும் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் முன்பு அந்த பள்ளத்தையும், குடிநீர் குழாய் உடைப்பையும் சரி செய்ய வேண்டும். அதேபோல, 19-வது வார்டுக்கு சாலை வசதி, மின்விளக்கு வசதி, கழிவுநீர் வடிகால் வசதி, தடையின்றி குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.