ஒரே நாளில் 27 தாசில்தார்கள் திடீர் இடமாற்றம் கலெக்டர் ஷில்பா உத்தரவு

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 27 தாசில்தார்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2019-02-22 22:30 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 27 தாசில்தார்களை திடீரென இடமாற்றம் செய்து கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூர் தாசில்தார் நல்லையா, சேரன்மாதேவி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், மானூர் தாசில்தார் மோகனா, அம்பை நதி நீர் இணைப்பு திட்ட (அலகு 1) தனி தாசில்தாராகவும், திருவேங்கடம் தாசில்தார் லட்சுமி, புளியங்குடி நத்தம் நிலவரித் திட்டம் (அலகு 2) தனி தாசில்தாராகவும், அம்பை தாசில்தார் ராஜேசுவரி, ராதாபுரம் நதி நீர் இணைப்பு திட்ட (அலகு 6) தனி தாசில்தாராகவும், சேரன்மாதேவி தாசில்தார் சொர்ணம், செங்கோட்டை தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதேபோல் சேரன்மாதேவி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் பகவதி பெருமாள், நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக நேர்முக உதவியாளராகவும், சிவகிரி தாசில்தார் செல்வசுந்தரி, திருமங்கலம்- செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் சிவகிரி (அலகு- 6), தனி தாசில்தாராகவும், ஆலங்குளம் தாசில்தார் பிரபாகர், அம்பை தாசில்தாராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்), திசையன்விளை தாசில்தார் தாஸ்பிரியன், நெல்லை மாவட்ட வழங்கல் பிரிவு பறக்கும் படை தனி தாசில்தாராகவும், தென்காசி தாசில்தார் சங்கர், வள்ளியூர் கிழக்கு கடற்கடை சாலை திட்ட தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.

நெல்லை கோட்ட கலால் அலுவலர் கனகராஜ், பாளையங்கோட்டை தாசில்தாராகவும், அம்பை நதி நீர் இணைப்பு திட்ட தனி தாசில்தார் கந்தப்பன், ஆலங்குளம் தாசில்தாராகவும், நெல்லை தனி தாசில்தார் (முத்திரை) செல்வன், ராதாபுரம் தாசில்தாராகவும், நெல்லை தாசில்தார் ஆவுடை நாயகம், திசையன்விளை தாசில்தாராகவும், புளியங்குடி நத்தம் நிலவரி திட்டம் (அலகு 2) தனி தாசில்தார் பாஸ்கரன், மானூர் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்கள்.

வள்ளியூர் கிழக்கு கடற்கரை சாலை தனி தாசில்தார் கிருஷ்ணவேல், சேரன்மாதேவி தாசில்தாராகவும், நெல்லை தனி தாசில்தார் சுப்பிரமணியன், நெல்லை தாசில்தாராகவும், செங்கோட்டை தனி தாசில்தார் அழகப்பராஜா, திருவேங்கடம் தாசில்தாராகவும், தென்காசி தனி தாசில்தார் ஆதி நாராயணன் (திருமங்கலம்- செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் அலகு-7), சிவகிரி தாசில்தாராகவும், அம்பை தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) அரிகரன், வீரகேரளம்புதூர் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

சிவகிரி தனி தாசில்தார் (திருமங்கலம்- செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் அலகு-6) வெங்கடேஷ், அம்பை தாசில்தாராகவும், ராதாபுரம் தனி தாசில்தார் (நதி நீர் இணைப்பு திட்டம்) சண்முகம், தென்காசி தாசில்தாராகவும், நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் பாதுகாப்பு தனி தாசில்தார் பாலசுப்பிரமணியன், சங்கரன்கோவில் தாசில்தாராகவும், பாளையங்கோட்டை தாசில்தார் கந்தசாமி, நெல்லை தனி தாசில்தாராகவும் (முத்திரை), சங்கரன்கோவில் தாசில்தார் ராஜேந்திரன், தென்காசி தனி தாசில்தாராகவும் (திருமங்கலம்- செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் அலகு-7), ஆலங்குளம் தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) கணேசன், நெல்லை தனி தாசில்தாராகவும் (குடிமை பொருள் வழங்கல்), நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளர் ஓசானா பெர்னாண்டோ, ஆலங்குளம் தாசில்தாராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்