நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 15 தாசில்தார்கள் இடமாற்றம் - கலெக்டர் உத்தரவு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 15 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.;
தேனி,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, தேனி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தாசில்தார்கள் 15 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பிறப்பித்துள்ளார். அதன்படி, தேனி டாஸ்மாக் உதவி மேலாளர் செந்தில்குமார் பெரியகுளம் ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராகவும், பெரியகுளம் ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் சரவணன் போடி தாசில்தாராகவும், போடி தாசில்தார் ஆர்த்தி தேனி தாசில்தாராகவும், தேனி தாசில்தார் சத்தியபாமா உத்தமபாளையம் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி முத்திரைத்தாள் தனி தாசில்தாராகவும், முத்திரைத்தாள் தனி தாசில்தார் சுந்தர்லால் பெரியகுளம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், பெரியகுளம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பிரதீபா கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மைத்துறை தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பேரிடர் மேலாண்மைத்துறை தனி தாசில்தார் செந்தில் கலெக்டர் அலுவலக மேலாளராகவும் (குற்றவியல்), கலெக்டர் அலுவலக மேலாளர் இளங்கோ ஆண்டிப்பட்டி வன நிலவரி திட்ட தனி தாசில்தாராகவும், வன நிலவரி திட்ட தனி தாசில்தார் குமார் போடி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டு உள்ளனர். போடி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அழகுமணி சின்னமனூர் நகர நில வரி திட்ட தனி தாசில்தாராகவும், சின்னமனூர் நகர நிலவரி திட்ட தனி தாசில்தார் பிரபாகர் பெரியகுளம் தாசில்தாராகவும், பெரியகுளம் தாசில்தார் ரத்னமாலா ஆண்டிப்பட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறை சிறப்பு தாசில்தாராகவும், ஆண்டிப்பட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறை சிறப்பு தாசில்தார் பாலசண்முகம் ஆண்டிப்பட்டி தாசில்தாராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.
அதேபோல், ஆண்டிப்பட்டி தாசில்தார் அர்ஜூனன் தேனி டாஸ்மாக் உதவி மேலாளராக மாற்றப்பட்டு உள்ளார்.