தமிழ்மொழி தெரியாததை ஊனமாக உணர்கிறேன் சமூக வலைதளத்தில் கிரண்பெடி வேதனை

தமிழ் மொழி தெரியாததால் மக்களிடம் நேரடியாக உரையாட முடியாமல் இருப்பதை தான் ஊனமாக உணர்வதாக கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-21 23:17 GMT
புதுச்சேரி,

புதுவை கவர்னராக கிரண்பெடி கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி பதவியேற்றார். இன்று (வெள்ளிக் கிழமை) அவர் பதவி யேற்ற 1000-வது நாள் ஆகும்.

இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கவர்னர் மாளிகையில் புகைப்பட கண்காட்சியும், கவர்னர் மாளிகையின் செயல்பாடுகள் குறித்த புத்தகமும் வெளியிடப்படுகிறது. நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

இந்த நாளையொட்டி அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

எனது செயல்பாடுகள் புதுவை மக்களின் நலனுக்காகத்தான் என்று என் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். புதுவை மக்களின் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன். கவர்னர் மாளிகை எந்த முடிவு எடுத்தாலும் அது மக்களின் நலனில் அக்கறை கொண்டுதான் எடுக்கப்படுகிறது. தமிழ் மொழி தெரியாததால் மக்களிடம் நேரடியாக உரையாட முடியாமல் இருப்பதை நான் ஊனமாக பல முறை உணர்ந்துள்ளேன். இருந்தபோதிலும் அதை அதிகாரிகள் எனக்கு மொழி பெயர்த்து தந்துள்ளனர்.

கவர்னர் மாளிகை கடந்த 1000 நாட்களில் செய்த பணிகளை ஆவணப்படுத்தியுள்ளோம். அதை புகைப்பட கண்காட்சியாகவும் வைக்க உள்ளோம். கவர்னர் மாளிகையின் பார்வையாளர் நேரத்தில் அதை பொதுமக்கள் பார்வையிடலாம்.

மேலும் செய்திகள்