தட்டார்மடம் அருகே தாய்-அக்காளை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
தட்டார்மடம் அருகே தாய்-அக்காளை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள செட்டிவிளை வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரான்சிஸ்கா மேரி (வயது 80). இவருடைய மகள் ஜான்சிராணி (45), மகன் அந்தோணி தங்கதுரை (41), கூலித்தொழிலாளி.
பிரான்சிஸ்கா மேரியின் பெயரில் 6 சென்ட் நிலம் அதே பகுதியில் உள்ளது. இதில் 3 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு அந்தோணி தங்கதுரை வலியுறுத்தினார்.
ஆனால் பிரான்சிஸ்கா மேரி, ஜான்சிராணிக்கு 4 பவுன் நகை திருப்பி கொடுக்க வேண்டி இருப்பதாகவும், அதன்பிறகு நிலத்தை தருவதாகவும் கூறினார். இதனால் அந்தோணி தங்கதுரை ஆத்திரத்தில் இருந்தார்.
கடந்த 21.9.2015 அன்று காலையில் பிரான்சிஸ்கா மேரி வீட்டுக்கு அந்தோணி தங்கதுரை சென்றார். அங்கு தாயிடம் தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அவரது உடலை தோளில் சுமந்தபடி அருகில் இருந்த தனது அக்காள் ஜான்சிராணியின் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டின் முன்பு இருந்த சாய்வு நாற்காலியில் தாயின் உடலை வைத்தார்.
பின்னர் வீட்டிற்கு நுழைந்த அந்தோணி தங்கதுரை அங்கிருந்த ஜான்சிராணியையும் சரமாரியாக வெட்டினார். அப்போது வீட்டில் இருந்த ஜான்சிராணியின் மகள் ஆரோக்கியஜெனிபர் (21) தடுக்க முயன்றார்.
அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் காயம் அடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியிலும், மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜான்சிராணி பரிதாபமாக இறந்தார்.
இந்த இரட்டைக்கொலை குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணி தங்கதுரையை கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கவுதமன், குற்றம் சாட்டப்பட்ட அந்தோணி தங்கதுரைக்கு தாய் பிரான்சிஸ்கா மேரி, அக்காள் ஜான்சிராணி ஆகியோரை கொன்றதற்கு 2 ஆயுள் தண்டனையும், ஆரோக்கிய ஜெனிபரை கொல்ல முயன்றதற்காக ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரத்து 780 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யு.எஸ்.சேகர் ஆஜர் ஆனார்.