ஸ்டெர்லைட் ஆலையை 100 சதவீதம் மூடுவதே நோக்கம் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 100 சதவீதம் மூடுவதே நோக்கம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 100 சதவீதம் மூடுவதே நோக்கம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆலை தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை கவனித்து வருகிறோம். ஐகோர்ட்டுக்கு சென்றாலும் சட்டரீதியான போராட்டம் நடத்த தயார் நிலையில் இருக்கிறோம்.
ஆலையில் உள்ள ரசாயன கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால், அதனை அரசு அகற்றுவதற்கு உயர்மட்டக்குழு அமைத்தது. அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் 95 சதவீதம் ரசாயனங்கள் அகற்றப்பட்டு உள்ளன. மீதம் உள்ள கழிவுகளும் அகற்றும் பணி நடக்கிறது.
இதனால் அங்கு உள்ள ரசாயனங்கள் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. ஜிப்சம், தாமிரதாது மட்டும் உள்ளது. அதனையும் முழுவதும் அகற்றி ஆலையை 100 சதவீதம் மூடுவதுதான் நோக்கம். மேலும் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தாலும், அதற்கான தொழில்நுட்ப ரீதியாக அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.