கலெக்டரை மிரட்டும் வகையில் பேசிய பெண் கிராம நிர்வாக அலுவலர் ‘வாட்ஸ்-அப்’பில் வெளியான ஆடியோவால் பரபரப்பு
நெல்லையில் கலெக்டரை மிரட்டும் வகையில் பெண் கிராம நிர்வாக அலுவலர் பேசிய ஆடியோ ‘வாட்ஸ்-அப்’பில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை,
விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு கிராம நிர்வாக அதிகாரிகள் பட்டியலை தயார் செய்து வருகின்றனர். ஆனால் ஒருசில விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் மனுக்களை வாங்க மறுப்பதாக கூறி நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, கிராம நிர்வாக அதிகாரிகள் சரியாக பணியாற்றாவிட்டால் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என பேசியது ‘வாட்ஸ்-அப்‘பில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கலெக்டருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நெல்லை தாலுகாவை சேர்ந்த ஒரு பெண் கிராம நிர்வாக அலுவலர் பேசிய ஆடியோ ‘வாட்ஸ்-அப்‘பில் நேற்று பரவி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவில் பெண் கிராம நிர்வாக அலுவலர் பேசி இருப்பதாவது:-
அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் வணக்கம், இந்த வேலையை யாரும் விருப்பப்படாமல் செய்யவில்லை, விருப்பப்பட்டுதான் செய்கிறோம். விவசாயிகளுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்றுதான், அதுவும் நேர்மையான முறையில் தெளிவான முறையில் செய்கிறோம். ஆனால் இந்த அளவுக்கு, தனியார் நிறுவனம்கூட வேலை வாங்குமா? என்று தெரியவில்லை. நாம் வேலை செய்வதற்கும் உரிய மரியாதை இல்லை. கலெக்டர் தனது ஆடியோவில் கிராம நிர்வாக அலுவலர்கள் என்ன வேலை செய்கிறார்கள், இதை கூட உங்களால் செய்ய முடியவில்லையா, கிராமத்தில் இல்லை என்றால் சஸ்பெண்டு செய்து விடுவேன் என்று கூறிஉள்ளார்.
விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க சென்றிருக்கிறார்கள் என்றால், அந்த கிராம நிர்வாக அலுவலருடன் விவசாயிகளுக்கு கருத்து முரண்பாடு இருந்திருக்கலாம், எனவே மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றிருக்கலாம். ஆனால் இதை காரணம் காட்டி கிராம நிர்வாக அலுவலர்களை எந்தவித விசாரணையும் இல்லாமல் சஸ்பெண்டு செய்து விடுவேன் என்று கூறுவது நல்லது இல்லை.
நாம் பணி செய்ய தவற மாட்டோம். ஆனால் அதற்கு காலஅவகாசம் கண்டிப்பாக வேண்டும். உடனே முடிய வேண்டும் என்றால் அது நேர்மையாக இருக்காது. உடனடியாக கேட்டால் அந்த அறிக்கையில் எப்படி தகுதி, தகுதி இல்லாதோர் விவரத்தை கொடுக்க முடியும்?
தாசில்தார், கலெக்டருக்கு 2, 3 உதவியாளர்கள் இருப்பார்கள். ஆனால் கிராம நிர்வாக அலுவலருக்கு எந்தவித வசதியும் இல்லாததால், நமது பணியை நாமே செய்து கொண்டு வீட்டு வேலைகளையும் செய்கிறோம். எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு நெல்லை மாவட்டத்தில் நம்மை கஷ்டப்படுத்துகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசி உள்ளார். மேலும் அவர் தனது பேச்சில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்.