பாவூர்சத்திரத்தில் கடையடைப்பு போராட்டம்
பாவூர்சத்திரத்தில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
பாவூர்சத்திரம்,
பாவூர்சத்திரத்தில் உள்ள வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 19-ந்தேதி நடந்தது. அன்று இரவு 1 மணியளவில் போலீசார், பக்தர்களை கலைந்து செல்லும்படி கூறியதாகவும், கடைகளை உடனே அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாவூர்சத்திரத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
பாவூர்சத்திரம் பஸ் நிலையம் முன்பு போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் விஜய்சிங்ராஜ், பொருளாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட வர்த்தக சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், இனிவரும் காலங்களில் திருவிழா நேரங்களில் இரவு முழுவதும் கடைகளை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியும், பக்தர்களை விரட்டியடிக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். முன்னாள் யூனியன் தலைவர் காமராஜ், அருணோதயம், தமிழரசி, சுப்பிரமணியன், பூபால்பாண்டியன், வியாபாரிகள், அனைத்துக்கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.