ஆரணியில் 4 அரிசி ஆலைகளில் வருமான வரித்துறையினர் ‘திடீர்’ சோதனை

ஆரணியில் 4 அரிசி ஆலைகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2019-02-21 22:15 GMT
ஆரணி, 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சிறுமூர் ரோட்டில் உள்ள பிரபல அரிசி ஆலையில் நேற்று காலை 11 மணி அளவில் சென்னை, திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து 20 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்

மேலும் இந்த அரிசி ஆலைக்கு சொந்தமான ராட்டிணமங்கலம், கல்லேரிப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள 3 அரிசி ஆலைகளிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இதனால் ஆரணி பகுதியில் உள்ள அரிசி ஆலை அதிபர்களுக்கிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் திருவண்ணாமலை பஜாரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு நேற்று மாலை 4 மணியளவில் வருமான வரி அதிகாரி சுப்பிரமணி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்துவதற்காக வந்தனர். அவர்கள் நகைக்கடையில் சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை சோதனை நடந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்