வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2019-02-21 22:45 GMT
ராஜபாளையம், 

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாவட்டத்தின் பல இடங்களில் நடந்தது.

ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி நகர காங்கிரஸ் சார்பில் அரசரடி பஸ் நிறுத்தம் அருகே நகர தலைவர் மணிகண்டன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேற்கு வட்டார தலைவர் லட்சுமணன், துணைத்தலைவர் சின்னதம்பி, மாவட்ட பஞ்சாயத்து ராஜ் ஒருங்கிணைப்பாளர் கணேசன், மாவட்ட விவசாய பிரிவு துணை தலைவர் தங்கவேல், மாவட்ட சேவாதள தலைவர் பச்சையாத்தான், தளவாய்புரம் கிராம காங்கிரஸ் தலைவர் சேகர், நகர துணை தலைவர் மீனாட்சி சுந்தரம், நகர செயலாளர்கள் பால்பாண்டியன், கடற்கரை, தனுஷ்கோடி, வன்னியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல ராஜபாளையம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சார்பில் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை அருகில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில், செயலாளர் பாக்கியராஜ், துணைத்தலைவர் சரவணன், சங்க பொறுப்பாளர் சுப்பிரமணியன், மாநில குழு உறுப்பினர் வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் மாரியப்பன் ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

அருப்புக்கோட்டை வட்டார பெந்தெகொஸ்தே போதகர்கள் கூட்டம் கர்மேல் பார்வதம் ஜெபக்கூடத்தில் பாஸ்டர் ஜேக்கப் ஜெம்புலிங்கம் தலைமையில் நடந்தது.

இதில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு அவர்களின் குடும்பத்தின் ஆறுதலுக்காக ஜெபித்தனர். கூட்டத்தில் மதுரை பிஷப் ஜீவன்ராஜ், பாஸ்டர்கள் முத்துக்குமார், சார்லஸ், செயலாளர் யோஸ்வா கண்ணன், பொருளாளர் பிரான்சிஸ், இருதயராஜ், உஷா ஜெபகுமார், ஜான்சிதீமேத்யூ, அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ராஜாசிங் நன்றி கூறினார்.

அருப்புக்கோட்டையில் முன்னாள் ராணுவ வீரர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் காவல்துறை சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.

இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், அன்னராஜ், செல்லப்பாண்டியன் முன்னிலையில் முன்னாள் ராணுவத்தினர், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பலர் கையில் தேசிய கொடியை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று டவுன் போலீஸ் நிலையத்தை அடைந்தனர்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த வீரர்களின் உருவப் படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்