செய்யாறு கோர்ட்டில் பெண் ஊழியரின் பையில் இருந்து பணத்தை திருடிய வாலிபர் கைது கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்

செய்யாறு கோர்ட்டில் பெண் ஊழியரின் பையில் இருந்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேமராவில் பதிவான காட்சி மூலம் சிக்கினார்.

Update: 2019-02-21 22:30 GMT
செய்யாறு, 

செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஆற்காடு சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கோர்ட்டில் வினோதினி (வயது 27) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று கோர்ட்டு அலுவல்களை முடித்துவிட்டு வினோதினி வெளியே சென்றார். அப்போது, தன்னுடைய பையை அலுவலக மேஜை மீது வைத்திருந்தார்.

பின்னர் வந்து பையை பார்த்தபோது, அதில் இருந்த 500 ரூபாய் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து கோர்ட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை பார்த்தபோது, வாலிபர் ஒருவர் பணத்தை திருடியது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான வாலிபர் குறித்து விசாரணை செய்தபோது, விண்ணாவாடி கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் (20) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வினோதினி கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்