அய்யா வைகுண்டர் பிறந்த நாள்: தூத்துக்குடி மாவட்டத்திற்கு 4-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு

அய்யா வைகுண்டர் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு 4-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-02-20 21:30 GMT

தூத்துக்குடி, 

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அய்யா வைகுண்டர் வழிபாட்டு தலங்களில் அய்யா வைகுண்டர் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுப்பு பொருந்தாது.

இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல. மேலும் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு செயல்படும். இந்த விடுமுறைக்கு பதிலாக வருகிற 9-ந் தேதி (சனிக்கிழமை) அன்று அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்