வானவில் : கோடக் இன்ஸ்டன்ட் பிரிண்ட் கேமரா
புகைப்படம் சார்ந்த பொருள்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கோடக் நிறுவனம் இன்ஸ்டன்ட் (உடனடி) பிரிண்டரை உருவாக்கியுள்ளது.
லாஸ் வேகாஸில் நடைபெற்ற கண்காட்சியில் கோடக் நிறுவனம் பல்வேறு நவீன கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தது. இதில் பெரும்பாலானவர்களைக் கவர்ந்தது இன்ஸ்டன்ட் பிரிண்ட் கேமராவாகும். அத்துடன் மொபைல் போட்டோ பிரிண்டரும் கோடக் நிறுவனத் தயாரிப்புகளாகும். கோடக் ஸ்மைல் இன்ஸ்டன்ட் பிரிண்ட் டிஜிட்டல் கேமரா, டிஜிட்டல் பிரிண்டர் ஆகியன முக்கியமானவை. கேமராவுடன் இணைந்ததாக டிஜிட்டல் போட்டோ பிரிண்டர் உள்ளது.
இந்த கேமராவானது காட்சிகளை பதிவு செய்ய 10 விநாடி நேரம் எடுத்துக் கொள்கிறது. இதில் பிளாஷ் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு வசதியும் உள்ளது. இதனுள் 3.51 X 4.25 அங்குலம் அளவுள்ள புகைப்பட தாள்கள் உள்ளன. இதனால் புளூடூத் மூலம் இயக்கி கூட காட்சிகளை பிரிண்ட் எடுக்கலாம். இந்த கேமரா 10 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. இதில் எல்.சி.டி. வியூ பைண்டர், ஆட்டோமேடிக் பிளாஷ் வசதி கொண்டது.
இதேபோல பிரிண்டரும் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படக் கூடியது. இவை இரண்டும் விரைவிலேயே விற்பனைக்கு வர உள்ளன.