காயல்பட்டினத்தில் உயிரி எரிவாயு நிலையம் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்

காயல்பட்டினத்தில் உயிரி எரிவாயு நிலையத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

Update: 2019-02-19 23:00 GMT
ஆறுமுகநேரி,

காயல்பட்டினம் அருணாசலபுரத்தில் குப்பை கிடங்கில் இருந்து உயிரி எரிவாயு (பயோ கியாஸ்) தயாரிக்கும் வகையில், ரூ.60 லட்சம் செலவில் உயிரி எரிவாயு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா, காயல்பட்டினம் நகரசபை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உயிரி எரிவாயு நிலையத்துக்கான கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர் அவர், காயல்பட்டினம் நகரசபையில் 3 இடங்களில் ரூ.1 கோடியே 96 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சாலைகளுக்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார். பின்னர் அவர், காயல்பட்டினம் நகரசபையில் 5 இடங்களில் ரூ.90 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் மணிராஜ், தாசில்தார் தில்லைப்பாண்டி, காயல்பட்டினம் நகரசபை ஆணையாளர் முருகன், நகரசபை என்ஜினீயர் சுரேஷ், சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை,

நகர செயலாளர் செய்யது இப்ராஹிம், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் அன்வர், அவை தலைவர் முத்து, முன்னாள் நகரசபை தலைவர்கள் வாவு செய்யது அப்துர் ரஹ்மான், வஹிதா, முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் அபுல்ஹசன் கலாமி, செயலாளர் வாவு சம்சுதீன், வாவு இஸ்ஸாக், காயல் அமானுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்