தேர்தலில் தனித்து போட்டியிட தி.மு.க. தயாரா? அமைச்சர் செல்லூர் ராஜூ சவால்
தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.;
மதுரை,
மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கான எண்ணற்ற சாதனை திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ரூ.1,000 பொங்கல் பரிசுத்தொகை, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ள ரூ.2 ஆயிரம் உதவித்தொகை ஆகியவை மிகவும் சிறப்பானதாகும். இதைக்கண்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலினால் பொறுக்க முடியாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார்.
திடீரென்று ஜப்பானில் நான் துணை-முதலமைச்சராக இருந்த போது என்று ஸ்டாலின் பேசுகிறார். இதைப்பார்த்து மக்களே இவரை காமெடி நடிகராக பார்க்கின்றனர். இவர் தி.மு.க. ஆட்சி இருக்கும் போது ஏன் கிராம சபை கூட்டம் ஏன் போடவில்லை. அப்படி அவர் போட்டிருந்தால் பொதுமக்கள் எங்கே மின்சாரம், எப்போது மின்சாரம் வரும் என்று கேள்வி கேட்டிருப்பார்கள். அது மட்டுமல்லாது சட்டசபையில் ஸ்டாலின் பேச்சைக்கண்டு துரைமுருகனே தலை குனிந்து கொண்டு சிரிப்பார். அந்த அளவிற்கு தி.மு.க.வில் இருக்கும் தலைவர்களாலேயே ஸ்டாலினின் பேச்சை கேட்கமுடியவில்லை.
காங்கிரசுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்று கருணாநிதியே கூறியுள்ளார். ஆனால் ஸ்டாலின் அதனை செய்ய போகிறார். அது மட்டுமல்லாது ஸ்டாலின், விரைவில் 21 தொகுதி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும். அதில் தி.மு.க.வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறுகிறார். நான் ஸ்டாலினை கேட்கிறேன். தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா?. அப்படி போட்டியிட்டால் தி.மு.க.விற்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று ஸ்டாலினுக்கு நன்றாக தெரியும்.
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தான் ஸ்டெர்லைட் ஆலை, மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தார்கள். ஜல்லிக்கட்டுக்கு தடையை ஏற்படுத்தினார்கள். தமிழக ஜீவாதார உரிமையை விட்டுக் கொடுத்து விவசாயிகளின் வயிற்றில் அடித்தார்கள். ஈழத்தமிழர்களை கொன்று கொன்று குவிக்க காரணமாக இருந்ததும் இந்த கூட்டணி. எனவே தமிழகத்திற்கு செய்த துரோகத்திற்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் வர இருக்கின்ற தேர்தல்களில் டெபாசிட் கூட வாங்க முடியாது. டி.டி.வி.தினகரன் வாய் சவுடால் பேசி வருகிறார். அவரால் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கு மக்கள் ஆதரவு கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.