‘பயோமெட்ரிக்’ முறையில் வருகைப்பதிவேடு பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டில் தகவல்

பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

Update: 2019-02-18 21:44 GMT
பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களின் வருகை பதிவு, முகம் அடையாளம் காணும் ‘பயோமெட்ரிக்’ மூலம் அறியப்பட்டு சம்பளம் வினியோகிக்கப்படும்.

* ஆவண பணிகளை விரைவாக முடிக்க அலுவலகங்கள் மின்னணு முறைக்கு மாற்றப்படும்.

* ‘அஜிம் பிரேம்ஜி’ அறக்கட்டளை சார்பில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் ஆளுமை மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

* நிர்வாக பணிகளை விரைந்து முடிக்க ஒற்றை ஆவண முறை அறிமுகம் செய்யப்படும்.

* மாநகராட்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்படும்.

* தகவல் தொழில்நுட்ப முறையை மேம்படுத்த ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* ரூ.22.50 கோடி சேமிக்கப்பட்டு அதன் வழியாக கிடைக்கும் வட்டியை கொண்டு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் மாநகராட்சி சார்பில் வாங்கிய கடன்கள் திரும்ப செலுத்தப்படும்.

* மாநகராட்சிக்கு சொந்தமான 11 சொத்துகள் அடமானம் வைக்கப்பட்டது. இதில் 6 சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. 2019-20 நிதி ஆண்டில் 2 சொத்துகள் மீட்கப்படும்.

* கர்நாடக நகராட்சி கணக்கு மற்றும் பட்ஜெட் விதிகள் 2006-ஐ மாநகராட்சியில் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

* மையப்படுத்தப்பட்ட நிதி மற்றும் கணக்கு முறை பின்பற்றப்படும்.

மேலும் செய்திகள்