கிருஷ்ணகிரியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

கிருஷ்ணகிரியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-18 22:15 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் கண்ணன். இவரது அலுவலகம் மற்றும் வீடு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணனின் அலுவலகம் மற்றும் வீட்டில் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். நேற்று இரவு 9 மணி முதல் இந்த சோதனை நடைபெற்றது.

துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் கண்ணனை நேற்று காலை தான் கோவை மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி ஆணையாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்