வேலூர், திருவண்ணாமலை மாவட்ட துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-02-18 22:15 GMT
வேலூர், 

நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதை முன்னிட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அரசு ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணிபுரியும் துணை போலீஸ் சூப்பிரண்டுகளை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பணியிட மாற்றம் செய்யப்பட்ட துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் விவரம் வருமாறு:-

வேலூர் மாவட்ட குற்ற ஆவணகாப்பகத்தில் பணிபுரிந்த சுந்தரமூர்த்தி காஞ்சீபுரம் பொருளாதார குற்றப்பிரிவுக்கும், அங்கு பணிபுரிந்த பூஞ்செழியன் வேலூர் குற்ற ஆவண காப்பகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். காட்பாடி லோகநாதன் நெய்வேலிக்கும், விழுப்புரம் மதுவிலக்குபிரிவில் பணிபுரிந்த சங்கர் காட்பாடிக்கும் மாற்றப்பட்டனர்.

குடியாத்தம் பிரகாஷ்பாபு திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கும், நெய்வேலி சரவணன் குடியாத்தத்திற்கும் மாற்றப்பட்டனர். போளூர் சின்னராஜ் திருவள்ளூர் சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவுக்கும், அரக்கோணம் துரைபாண்டியன், திருவண்ணாமலை சமூகநீதி மற்றும் மனிதஉரிமை பிரிவுக்கும், அங்கு பணிபுரிந்த ரவி சேலம் சி.ஐ.டி. பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சிதம்பரத்தில் பணிபுரிந்த பாண்டியன், அரக்கோணத்திற்கும், திருப்பத்தூர் ஜேசுராஜ் செய்யாறுக்கும், கடலூர் தங்கவேல், திருப்பத்தூருக்கும், செய்யாறு குணசேகரன் திட்டக்குடிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட தகவல் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்