பழனி அருகே, விஷம் குடித்த புதுப்பெண் சாவு

பழனி அருகே, விஷம் குடித்த புதுப்பெண் சாவு

Update: 2019-02-17 22:45 GMT
பழனி, 

பழனி அருகே உள்ள ஆயக்குடி 1-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருக்கும் திருச்சி மாவட்டம் வையம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகள் பிரமிளா (வயது 27) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரமிளா நர்சிங் படித்துள்ளார். இந்நிலையில் சில நாட்களாக இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 12-ந்தேதி இவர் வீட்டில் விஷம் குடித்தார். இதையடுத்து அவருடைய உறவினர்கள் பிரமிளாவை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பிரமிளா இறந்தார். இதுகுறித்து பிரமிளாவின் தாயார் பழனியம்மாள் ஆயக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்