காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு கருணாஸ் எம்.எல்.ஏ. ஆறுதல்

காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு கருணாஸ் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.

Update: 2019-02-17 22:00 GMT
கயத்தாறு, 

காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு கருணாஸ் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.

கருணாஸ் எம்.எல்.ஏ. ஆறுதல்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடல் நேற்று முன்தினம் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. நேற்று மதியம் சவலாப்பேரிக்கு வந்தார். அவர் ராணுவ வீரர் சுப்பிரமணியனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் சுப்பிரமணியனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது அவரிடம், சுப்பிரமணியனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சுப்பிரமணியனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு கருணாஸ், தமிழக அரசு உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது. கண்டிப்பாக அரசு வேலை வழங்கப்படும். மணிமண்டபம் கட்ட ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

கடம்பூர் ஜனார்த்தனன்

முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனன், ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதேபோல் தி.மு.க. வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சுப்பிரமணியன், ராணுவ வீரர் சுப்பிரமணியன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் செய்திகள்