காவலர் பயிற்சி மையத்தில் இன்ஸ்பெக்டர் மர்மச்சாவு கழிவறையில் பிணமாக கிடந்தார்
ஆவடியில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் உள்ள கழிவறையில் இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
ஆவடி,
சென்னை ஆவடி நந்தவனமேட்டூர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 57). இவரது மனைவி பார்வதி செல்வம் (53). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். முனுசாமி உளுந்தூர்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை பத்தாவது பட்டாலியனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். ஏற்கனவே ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை பயிற்சி மையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவ விடுப்பில் முனுசாமி வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த 9-ந் தேதி ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை பயிற்சி மையத்திற்கு சென்று, நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு சென்றார்.
அதன்பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரது மகன், காவல் படை பயிற்சி மையத்திற்கு சென்று விசாரித்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், ‘உனது தந்தை இங்கு தான் இருந்தார்?. எங்கே போனார்? என்று தெரியவில்லை தேடி பாருங்கள்’ என்று கூறியுள்ளனர். இதையடுத்து பயிற்சி மையத்தில் தேடி பார்த்தார்.
அப்போது அங்கு இருந்த பயன்படுத்தப்படாத கழிவறையில் துர்நாற்றம் வீசியது. அங்கு மர்மமான முறையில் இன்ஸ்பெக்டர் முனுசாமி இறந்து கிடந்தார். அவர் இறந்து 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. அவருடைய உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
தகவல் அறிந்த ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் இறந்தது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.