தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் பால்கம்பம் நடும் நிகழ்ச்சி
தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவிலில் பால்கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற மரகதாம்பாள் சமேத சந்திரசூடேஸ்வரர் சாமி மலைக்கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தேர்த்திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 20-ந் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி, பால் கம்பம் நட்டு, தேர் கட்டும் பணி நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், கல்யாண சூடேஸ்வர சாமி கமிட்டி தலைவருமான கே.ஏ.மனோகரன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பால் கம்பம் நட்டு், தேர் சக்கரங்களுக்கு பூஜை செய்யப்பட்டது.
கோவில் செயல் அலுவலர் ராஜரத்தினம், ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மலைக்கோவில் தலைமை அர்ச்சகர் வாசீஸ்வரன் பூஜைகளை முன்னின்று நடத்தினார். இதில் மாநில பா.ஜ.க. இளைஞரணி செயலாளர் நாகராஜ், மாவட்ட பா.ஜ.க. செயலாளர் ராஜி, பாலு, ஆர்.லோகநாதன், ஊர் கவுண்டர்கள், தேர்பேட்டை பிரமுகர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள், கமிட்டி நிர்வாகிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பால் கம்பம் நடப்பட்டதை தொடர்ந்து, தேர் கட்டும் பணி தொடங்கியது.