குளறுபடிகள் இல்லாத வகையில் வாக்காளர் பட்டியலை முறையாக ஆய்வு செய்து தயாரிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அலுவலர் உத்தரவு
குளறுபடிகள் இல்லாத வகையில் வாக்காளர் பட்டியலை முறையாக ஆய்வு செய்து தயாரிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்,
எந்தவித குளறுபடிகளும் இல்லாத வகையில், முறையாக ஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும், என தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ராமன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு பேசியதாவது:-
தேர்தலில் ஈடுபடும் அனைத்து அரசு அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் முதல், கடை நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் வரை தேர்தல் தொடர்பான பயிற்சிகளை முறையாகவும், எந்த வித சந்தேகத்துக்கும் இடம் அளிக்காமல் தெரிந்து கொள்ளவேண்டும் எனப் பயிற்சிகளை அளித்து வருகிறது.
குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம் ஆகியவற்றை கையாள்வதை எந்தவித சந்தேகமின்றி கட்டாயமாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் எந்தவித குளறுபடிகள் இல்லாத வண்ணம் முறையாக ஆய்வு செய்து பட்டியலை தயார் செய்ய வேண்டும். தகுதி வாய்ந்த அனைவரும் கட்டாயமாக வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வேலூர் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிப்பதையும், அவர்களுக்கான அனைத்து வசதிகள் வாக்குச்சாவடி மையங்களில் அமைத்துக் கொடுப்பதையும் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
இவைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அறிக்கை அனுப்பி குறைகள் இல்லாமல் கண்காணிக்க வேண்டும். வருகிற 23-ந்தேதி மற்றும் 24-ந் தேதி ஆகிய 2 நாட்களில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை மக்கள் பயன்படுத்த தேவையான அனைத்து விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டும்.
மேலும் வரும் தேர்தலில் ஏற்படும் சட்ட ஒழுங்கு பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து, கடந்த தேர்தலில் ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டு பாதுகாப்புகள் குறித்துக் காவல் துறையினர் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், சப்- கலெக்டர்கள் மெகராஜ், பிரியங்கா, இளம்பகவத், அனைத்துத் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், துணை கலெக்டர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வாக்காளர்கள் உதவி மையத்துக்குத் தலைமை தேர்தல் அலுவலர் சென்று பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் குறித்து மையத்தில் பணிபுரியும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
எந்திரம் ‘திடீர்’ பழுது
தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு வருகையையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரமும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்வதற்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எந்திரமும் வைக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் பொதுமக்கள் பலர் வாக்குப்பதிவு செய்யும் முறையையும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை மாதிரியாகவும் தெரிந்து கொண்டனர்.
இந்த நிலையில் தலைமை தேர்தல் அலுவலர் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அங்கு வைக்கப்பட்டிருந்த, “யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம் திடீரென பழுதானது. அதிகாரிகள் அதனை உடனடியாக அப்புறப்படுத்தினர். வேறு எந்திரத்தைக் கொண்டு வருவதற்குள், தலைமை தேர்தல் அலுவலர் அங்கு வந்து விட்டார். அப்போது அவர் சம்பந்தப்பட்ட எந்திரம் எங்கே? என்ற கேள்வி எழுப்பினார். இன்று (அதாவது நேற்று) சனிக்கிழமை என்பதால் எந்திரம் வைக்கவில்லை எனப் பதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள சென்று விட்டார்.