இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் பதவிக்கான தேர்வை 2,975 பேர் எழுதினர் 2,568 பேர் எழுதவில்லை
இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் பதவிக்கான தேர்வை 2 ஆயிரத்து 975 பேர் எழுதினார்கள். இந்த தேர்வை 2 ஆயிரத்து 568 பேர் எழுதவில்லை.
சேலம்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் கிரேடு-3 பதவிக்கான போட்டித்தேர்வு நேற்று சேலத்தில் நடைபெற்றது. இந்த தேர்வு மையங்களில் ஒன்றான சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ரோகிணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் களுக்கான தேர்வு மாவட்டத்தில் 8 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்காக மொத்தம் 5 ஆயிரத்து 543 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வை எழுத வந்தவர்கள் பல்வேறு கட்ட சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வை 2 ஆயிரத்து 975 பேர் எழுதினர். ஆனால் 2 ஆயிரத்து 568 பேர் தேர்வு எழுதவில்லை.
தேர்வை 19 வீடியோ கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. மேலும் வருவாய்த்துறை அலுவலர்களும், பறக்கும் படை அலுவலர்கள் உள்ளிட்ட 10 குழுவினர் தேர்வை கண்காணித்தனர். இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவிக்கான போட்டித்தேர்வை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.