மும்பை காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சஞ்சய் நிருபத்தை நீக்கியே ஆக வேண்டும் கோஷ்டி தலைவர்கள் வலியுறுத்தல்

மும்பை காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சஞ்சய் நிருபத்தை நீக்கியே ஆக வேண்டும் என்று சில காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் டெல்லி சென்று வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2019-02-16 23:00 GMT
மும்பை,

மும்பை காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சஞ்சய் நிருபத்தை நீக்கியே ஆக வேண்டும் என்று சில காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் டெல்லி சென்று வலியுறுத்தி உள்ளனர்.

சஞ்சய் நிருபம் நீக்கம்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மும்பை காங்கிரசில் கோஷ்டி மோதல் பூதாகரமாகி உள்ளது. அந்த கட்சியை சேர்ந்த ஒரு கோஷ்டியினர் சமீபத்தில் டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், மராட்டிய பொறுப்பாளருமான மல்லிகார்ஜூன கார்கேயை சந்தித்தனர். அப்போது அவர்கள் சஞ்சய் நிருபத்தை மும்பை காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் சஞ்சய் நிருபத்தை மாற்றுவது சரியாக இருக்காது என டெல்லி வட்டாரம் கருதி உள்ளது.

மீண்டும் டெல்லி சென்றனர்

இந்தநிலையில் மீண்டும் மும்பையை சேர்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கிரிபாசங்கர் சிங், நசீம்கான், ஏக்நாத் கெய்க்வாட், வர்ஷா கெய்க்வாட் உள்ளிட்டவர்கள் மல்லிகார்ஜூன கார்கேயை சந்தித்து உள்ளனர். அவர்கள் சஞ்சய் நிருபத்தை பதவியில் இருந்து நீக்கியே ஆக வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தநிலையில் சஞ்சய் நிருபத்தை பதவியில் இருந்து நீக்கினாலும் அவரது ஆதரவாளர் ஒருவர் தான் மும்பை தலைவராக நியமிக்கப்படுவார் என சஞ்சய் நிருபத்தின் ஆதரவு தலைவர் ஒருவர் கூறினார்.

மும்பை காங்கிரசில் தீராத கோஷ்டி மோதலால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்