சேலத்தை பசுமை மாவட்டமாக மாற்ற வேண்டும் முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி பேச்சு
மாணவர்கள் அதிக மரக்கன்றுகள் நட்டு சேலத்தை பசுமை மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி கூறினார்.;
சேலம்,
சேலம் அரசு கலைக்கல்லூரியில் சுற்றுப்புறச்சூழல் மைய தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதற்கு பேராசிரியை கங்கையம்மாள் வரவேற்றார். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி, ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி கலந்து கொண்டு சுற்றுப்புறச்சூழல் மையத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பல ஆண்டுகளுக்கு முன்பு கலப்படம் இல்லாத தண்ணீர் கிடைத்தது. ஆனால் இப்போது அதுபோன்ற தண்ணீர் கிடைப்பது இல்லை. மலைகளில் பயிரிடப்படும் தேயிலை பயிர்களுக்கு கூட ரசாயன உரம் சேர்க்கப்படுகிறது. இதனால் மலைகளில் இருந்து வரும் தண்ணீரில் கூட நச்சு கலந்து வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
காடு, மரங்கள் அழிக்கப்படுவதால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைந்து உள்ளது. மரங்களை அழிப்பதை தவிர்க்க வேண்டும். அதே போன்று மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். குறிப்பாக மாணவ-மாணவிகள் அதிக மரக்கன்றுகள் நட்டு வைத்து சேலத்தை பசுமை மாவட்டமாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இதில் மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.