எல்லப்பன்பேட்டை நடுநிலைப்பள்ளிக்கு உபகரணங்கள் கிராம மக்கள் வழங்கினர்

எல்லப்பன்பேட்டை நடுநிலைப்பள்ளிக்கு உபகரணங்களை கிராம மக்கள் வழங்கினர்.

Update: 2019-02-16 21:45 GMT
குறிஞ்சிப்பாடி,

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள எல்லப்பன்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி சீர் விழா நடைபெற்றது. விழாவில் குறிஞ்சிப்பாடி வட்டார கல்வி அலுவலர்கள் சவரிமுத்து, மன்னர்மன்னன், செல்வி, வட்டார வள மேற்பார்வையாளர் கிருஷ்ணா, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

எல்லப்பன்பேட்டை கிராம மக்கள் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள உபகரணங்களான பீரோ, மேஜை, நாற்காலி, சில்வர் தட்டுகள், டம்ளர்கள், கெடிகாரம், தலைவர்களின் உருவப்படம், விளக்குகள், குப்பைக்கூடைகள், நோட்டு-புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை மேளதாளத்துடன் ஊர்வலமாக நடுநிலைப்பள்ளிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அதனை, அதிகாரிகளிடம் கிராம மக்கள் கொடுத்தனர். மேலும் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 60 சென்ட் நிலமும் பள்ளிக்கூடத்துக்கு கொடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்