திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 42 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 42 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-02-16 22:15 GMT
திண்டுக்கல்,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 2 மாவட்டங்களிலும் 42 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயசிங் தேனி பெரியகுளத்துக்கும், திண்டுக்கல் வடக்கு இன்ஸ்பெக்டர் தெய்வம் தேனி அல்லிநகரத்துக்கும், கீரனூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உத்தமபாளையத்துக்கும், பழனி தாலுகா இன்ஸ்பெக்டர் பொன்னிவளவன் கம்பத்துக்கும், வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் சின்னமனூருக்கும், அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் கூடலூருக்கும், சத்திரப்பட்டி இன்ஸ்பெக்டர் அமுதா கம்பத்துக்கும் மாற்றப்பட்டனர்.

அதேபோல் ஆயக்குடி இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தேனி நிலஅபகரிப்பு பிரிவுக்கும், திண்டுக்கல் நக்சல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின்மும்தாஜ் தேவாரத்துக்கும், கொடைக்கானல் மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயராணி தேனி மதுவிலக்கு பிரிவுக்கும், நிலக்கோட்டை மகளிர் இன்ஸ்பெக்டர் பேபி தேனி நகருக்கும், ஒட்டன்சத்திரம் மகளிர் இன்ஸ்பெக்டர் கீதா உத்தமபாளையம் மகளிருக்கும், நத்தம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வடமதுரைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் திண்டுக்கல் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரபா கொடைக்கானல் மகளிருக்கும், வடமதுரை மகளிர் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும், பழனி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் எஸ்.முத்துலட்சுமி தீவிர குற்றத்தடுப்பு பிரிவுக்கும், திண்டுக்கல் தெற்கு இன்ஸ்பெக்டர் சரவணன் திண்டுக்கல் மதுவிலக்குக்கும், ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் ஏ.பாலமுருகன் செம்பட்டிக்கும், செம்பட்டி இன்ஸ்பெக்டர் ராதிகா பழனி மதுவிலக்குக்கும், திண்டுக்கல் நிலஅபகரிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கோசலைராமன் வேடசந்தூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுதவிர தேனி மாவட்டத்தில் பெரியகுளம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சந்திரன் வேடசந்தூர் போக்குவரத்துக்கும், கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தேனி மகளிருக்கும், தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சுகுமாறன் போடிநாயக்கன்பட்டிக்கும், அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் சரவணதேவேந்திரன் தேனி நக்சல் தடுப்பு பிரிவுக்கும், கூடலூர் இன்ஸ்பெக்டர் ஷாஜகான் போடிநாயக்கனூருக்கும்(சர்கில்-2), போடிநாயக்கனூர் (சர்கில்-1) இன்ஸ்பெக்டர் சேகர் நத்தத்துக்கும், சின்னமனூர் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார் ஒட்டன்சத்திரத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆயக்குடிக்கும், கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் உலகநாதன் திண்டுக்கல் வடக்குக்கும், தேனி நிலஅபகரிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் வத்தலக்குண்டுக்கும், தேனி நகர் இன்ஸ்பெக்டர் லாவண்யா அம்மையநாயக்கனூருக்கும், போடிநாயக்கனூர் (சர்கில்-2) இன்ஸ்பெக்டர் காயத்ரி ஒட்டன்சத்திரம் மகளிருக்கும், தேனி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மீனாட்சி வடமதுரை மகளிருக்கும், தேனி மகளிர் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி பட்டிவீரன்பட்டிக்கும், உத்தமபாளையம் மகளிர் இன்ஸ்பெக்டர் தேன்மொழி நிலக்கோட்டை மகளிருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் தீவிர குற்றத்தடுப்பு இன்ஸ்பெக்டர் சுபக்குமார், வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி, எரியோடு இன்ஸ்பெக்டர் கருப்பசாமி, பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் கலைவாணி, தேனி நக்சல்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ்ஜெயராஜ், தேனி ராஜதானி இன்ஸ்பெக்டர் முத்துமணி, தேவாரம் இன்ஸ்பெக்டர் மங்கையர் திலகம் ஆகியோர் மதுரை நகருக்கு மாற்றப்பட்டனர். 

மேலும் செய்திகள்