சிமெண்டு விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் கட்டிட கட்டுனர்கள் சங்க தேசிய தலைவர் பேட்டி
சிமெண்டு விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று கட்டிட கட்டுனர்கள் சங்க தேசிய தலைவர் புகழேந்தி கூறினார்.;
பெரம்பலூர்,
பெரம்பலூரில் இந்திய கட்டிட கட்டுனர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் நடந்தது. இதில் சங்கத்தின் தேசிய தலைவர் புகழேந்தி சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததாவது:-
தற்போது ஒரே நாளில் ஒரு சிமெண்டு மூட்டைக்கு ரூ.70 வரை விலை உயர்த்தப்பட்டது கட்டுமான தொழிலை கடுமையாக பாதிக்கும். சிமெண்டு விலை உயர்வால் கட்டுமான பணிகள் வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில் நாடுமுழுவதும் கட்டுமான தொழிலை நம்பி உள்ள சுமார் 5 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள்.
சிமெண்டு விலையின் திடீர் உயர்வுக்கு அகில இந்திய கட்டிட கட்டுனர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் சிமெண்டு விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு ஒழுங்குபடுத்தும் குழுவை அமைக்க வேண்டும்.
பிற மாநிலங்களை போல தமிழகத்திலும் அரசு கட்டிட ஒப்பந்தங்களை முடிவு செய்திட ஒளிவு மறைவற்ற இ-டெண்டர் முறையை அமல்படுத்த வேண்டும். கட்டுமான தொழிலை நம்பி நாடுமுழுவதும் 5 கோடி தொழிலாளர்கள் இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு சிமெண்டு விலையை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு வரம்பிற்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும்.
புதிய கட்டிடங்கள் மற்றும் இதர சொத்துக்களை பதிவு செய்யும்போது பத்திரப்பதிவு துறையில் ஆவண கட்டணம் 11 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இதனை 10 சதவீதமாக குறைக்க வேண்டும். நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்களில் வீடுகள், கட்டிடங்கள் கட்டுவதற்கு வரைபட அனுமதி பெறுவதற்காக மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. அதுதவிர லஞ்சம் அதிக அளவில் செலுத்தப்படவேண்டி உள்ளது. இதனை தவிர்க்க ஒற்றை சாளரமுறையில் ஓரிரு நாட்களுக்கு வரைபட முன்அனுமதி பெறும் வசதியை அமல்படுத்திடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது இந்திய கட்டிட கட்டுனர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் பொறியாளர் ராஜாராம், பொறுப்பாளர்கள் இமயவரம்பன், கலை தர்மராஜ், என்ஜினீயர் மோகன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து இந்திய கட்டிட கட்டுனர்கள் சங்கத்தினர் காஷ்மீர் மாநிலம் புல்வாரா பகுதியில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாவட்ட தலைவர் ராஜாராம் தலைமையில் அங்கிருந்து ஊர்வலமாக பாலக்கரை பகுதியில் உள்ள இந்திய பொன்விழா நினைவு தூண் பகுதிக்கு வந்தடைந்தனர்.
அங்கு இந்திய கட்டிட கட்டுனர்கள் சங்க தேசிய தலைவர், மாநில, மாவட்ட நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி, காஷ்மீரில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.