ரூ.2 ஆயிரம் வழங்க பட்டியல் தயாரிப்பதில் முறைகேடு; பொதுமக்கள் சாலை மறியல்

தமிழக அரசு அறிவித்த ரூ.2 ஆயிரம் வழங்க பட்டியல் தயாரிப்பதில் முறைகேடு நடப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-16 22:15 GMT
செங்கல்பட்டு, 

வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்துள்ள மேலமையூர் பகுதியில் படிவத்தை பூர்த்தி செய்ய அரசு அதிகாரிகள் வந்தனர். அப்போது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களிடம் படிவத்தை பூர்த்தி செய்யாமல் அரசு பணியாளர்களிடம் மட்டும் படிவத்தை பூர்த்தி செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மேலமையூர் பகுதி பொதுமக்கள், வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்க பட்டியல் தயாரிப்பதில் முறைகேடு நடக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த துணை தாசில்தார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்