உடன்குடி அருகே காலிக்குடங்களுடன் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை சீராக குடிநீர் வழங்க கோரிக்கை
உடன்குடி அருகே சீராக குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
மெஞ்ஞானபுரம்,
உடன்குடி அருகே சீராக குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பஞ்சாயத்து அலுவலகம் முற்றுகை
உடன்குடி அருகே பரமன்குறிச்சி 1-வது வார்டு என்.எஸ்.கே.தெரு, சிங்கராயபுரம், பெருமாள்புரம், யாதவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 8 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
எனவே அப்பகுதியில் சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலையில் காலிக்குடங்களுடன் பரமன்குறிச்சி பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன், உடன்குடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராணி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அப்பகுதியில் உடனே சீராக குடிநீர் வினியோகம் செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.