மன அழுத்தத்திற்கு ‘மருந்து’

மன அழுத்த பாதிப்புக்குள்ளாகிறவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவது பலனளிக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.;

Update: 2019-02-17 09:00 GMT
10 பேரில் ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆளாவதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்ட ஹார்வர்டு மருத்துவ பள்ளி உதவி பேராசிரியர் டாக்டர் மிச்செல் கிரேய் மில்லர், ‘‘மன அழுத்தத்திற்கு சிறந்த சிகிச்சையாக உடற்பயிற்சி அமைந்திருக்கிறது.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும்போது ‘எண்டோர்பின்’ ஹார்மோன் உடலில் இருந்து வெளியாகும். இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும். உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் இதய நோய், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம். இரவில் சரியாக தூக்கம் வராமல் அவதிப் படுபவர்களுக்கும் ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும்.

மூளையின் செயல்பாடுகளிலும் முன்னேற்றம் காணப்படும். மூளையில் உள்ள நரம்பு செல்களின் வளர்ச்சிக்கு உடற்பயிற்சி தூண்டுகோலாக இருக்கிறது. நரம்பு செல்களின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும்போது மன அழுத்தம் குறையத் தொடங்கும். 15 நிமிடங்கள் நடந்து சென்று வருவது கூட மன அழுத்தத்திற்கு நிவாரணம் தேடி தரும். ஏதாவதொரு வகையில் உடல் இயக்கத்துடன் கூடிய எளிய உடற்பயிற்சியையாவது தினமும் மேற்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள் உடற்பயிற்சியை தொடங்கிய சில நாட்களிலேயே மன நிலையில் நல்ல மாற்றத்தை உணருவார்கள்’’ என்கிறார்.

மேலும் செய்திகள்