மந்திரிகளுக்கு வாழ்நாள் சம்பளம்... மக்கள் அதிருப்தி

ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் மந்திரிகளுக்கு வாழ்நாள் சம்பளம் அறிவிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2019-02-16 10:42 GMT
மந்திரிகளுக்கு வாழ்நாள் சம்பளத்துடன், பிற சலுகைகளையும் வழங்குவதாக காங்கோ ஜனநாயக குடியரசு அரசாங்கம் அறிவித்துள்ளது.

‘இந்தச் சம்பளம், மந்திரிகளை வளப்படுத்துவதற்காக இல்லை’ என அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னாள் மந்திரிகளுக்கு குறைந்தது 2 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை சலுகைகளை வழங்கும் அந்த அரசு உத்தரவு பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

காரணம், காங்கோவில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே தவிக்கின்றனர்.

ஆனால், மந்திரிகளுக்கு அவர்களின் ஆயுட்காலம் முழுவதும் சம்பளம் வழங்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

மந்திரிகளின் அடிப்படைத் தேவைகளான உணவு, மருத்துவம் மற்றும் வசிப்பிட வசதிக்காகவே இந்தச் சம்பளம் வழங்கப்படுகிறது என்றும், அவர்கள் வறுமையில் வாடக்கூடாது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

சட்டம் இயற்றுவோர், மக்களைவிட தங்களைப் பற்றித்தான் அதிகம் கவலைப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்