பொன்புதுப்பட்டி அரசு பள்ளிக்கு பெற்றோர்கள் கல்விச்சீர்

பொன்புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு பெற்றோர்கள் கல்விச்சீர் வழங்கினர்.;

Update: 2019-02-15 22:00 GMT
பொன்னமராவதி,

பொன்னமராவதியை அடுத்துள்ள புதுப்பட்டியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பள்ளிக்கு கல்விச்சீர் வழங்க முடிவு செய்தனர். இதையடுத்து பள்ளிக்கு தேவையான புத்தகம், மேஜை, மின்விசிறி, மரக்கன்றுகள், சிந்தனை புத்தகங்கள், முதலுதவி பெட்டி, எழுது பொருட்கள், கணித பெட்டி, குப்பைத்தொட்டி மற்றும் கல்வி உபகரணங்கள், விளையாட்டு சம்பந்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் பொருட்களையும் பொன்னமராவதி பட்டமரத்தான் கோவில் திடலில் இருந்து மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக பொன்னமராவதி பஸ் நிலையம், அண்ணாசாலை, காந்திசிலை வழியாக பொன்புதுப்பட்டி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தடைந்தனர்.

இதைதொடர்ந்து பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலா தலைமை தாங்கினார். ஆசிரியர் பூபதி வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வக்குமார், அறமனச்செம்மல் மாணிக்கவேலு, தமிழாசிரியர் பாரதிதாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் கொண்டு வந்த பொருட்களை பெற்றோர்கள், தலைமையாசிரியரிடம் வழங்கினர். இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள மனப்பட்டி, ஏனாதி ஊராட்சி, பிடாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொன்னமராவதி வட்டாரக்கல்வி அதிகாரி ராஜா சந்திரன், பால் டேவிட் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளிக்கு தேவையான கல்வி உபகரணங்களை பொதுமக்கள் கொண்டு வந்து தலைமை ஆசிரியரிடம் வழங்கினர்.

இதில் வட்டார வளமையம் மேற்பார்வையாளர் செல்வகுமார், ஆசிரியர் பயிற்றுனர்கள் புவனேஸ்வரி, பரிசுத்தம், அன்பழகன், தலைமையாசிரியர் பார்த்தசாரதி மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்