நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: 2 இன்ஸ்பெக்டர்கள், 33 சப்- இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் சேலம் சரக டி.ஐ.ஜி. உத்தரவு

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக 2 இன்ஸ்பெக்டர்கள், 33 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2019-02-15 22:30 GMT
கிருஷ்ணகிரி, 

நாடாளுமன்றத்திற்கு தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி ஒரே மாவட்டத்தில் நீண்ட நாட்கள் பணியாற்றிய போலீசாரை இடமாற்றம் செய்திட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நீண்ட நாட்களாக ஒரே மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் ஊத்தங்கரை மது விலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சோமசுந்தரம் ஆகிய 2 பேர் சேலம் மாநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் மஞ்சுநாதன், பேபி, ஜெய்கீர்த்தி, பாரதிராஜா, உள்பட 33 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேலம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. டி.செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்