செய்யாறில் மாணவ-மாணவிகளுக்கு ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல் போட்டி மாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்

செய்யாறில் பாட தலைப்பில் மாணவ- மாணவிகளுக்கு ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல் போட்டி நடந்தது.

Update: 2019-02-14 22:45 GMT
செய்யாறு, 

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செய்யாறு கல்வி மாவட்டத்தை சேர்ந்த செய்யாறு, வந்தவாசி, அனக்காவூர், வெம்பாக்கம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களின் சிந்தனை ஆற்றல் வெளிப்படுத்தவும், மாணவ-மாணவிகளுக்கு பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்திடும் விதமாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு பாடத்தலைப்பில் மாணவர்கள் ஆய்வு கட்டுரை தயார் செய்து சமர்ப்பித்தல் போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் எம்.எஸ்.சுகானந்தம் தலைமை தாங்கினார். பள்ளி துணை ஆய்வாளர் எஸ்.புக ழேந்தி முன்னிலை வகித் தார்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அலுவலர் பி.நடராஜன் (பொறுப்பு) கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய 5 பாட ஆசிரியர்கள் தனித்தனி குழுவாக அமர்ந்து மாணவ- மாணவிகள் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரை குறித்து கேட்டறிந் தனர்.

பின்னர் செய்யாறு, வந்த வாசி, அனக்காவூர், வெம் பாக்கம் ஆகிய 4 ஒன்றியத்தில் ஒவ்வொரு பாடத்திலும் சிறந்த ஆய்வு கட்டுரை சமர்பித்த 5 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கல்வி மாவட்ட அளவில் சிறந்த ஆய்வு கட்டுரை சமர்பித்த 20 மாணவ- மாணவிகள் இன்று (வெள்ளிக் கிழமை) திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடை பெறும் ஆய்வு கட்டுரை சமர்பித்தல் போட்டியில் பங்கேற்கின்றனர் என்று மாவட்ட கல்வி அலுவலர் பி.நடராஜன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்