குழந்தைகள் நலக்குழு தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அண்ணாதுரை தகவல்

குழந்தைகள் நலக்குழு தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார்.;

Update: 2019-02-10 22:30 GMT
தஞ்சாவூர்,

2015ம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த சமூக பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பிரிவிலிருந்து ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்,

குழந்தைகள் தொடர்பான உடல் நலம். கல்வி அல்லது நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் தீவிர ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல், சட்டம், சமூக பணி, சமூகவியல் அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருக்க வேண்டும்.

ஒரு குழுவில் அதிகபட்சமாக இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர். ஆனால் தொடர்ந்து பதவி வகிக்க இயலாது. இதற்கான விண்ணப்பபடிவத்தினை தஞ்சை வ.உ.சி.நகர் அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் என்ற முகவரியிலோ அல்லது தஞ்சை மாவட்ட www.thanjavur.tn.nic.in என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 27-ந்தேதி மாலை 5 மணிக்குள் மேற்கண்ட அலுவலகத்திற்கு வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்