வெவ்வேறு விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி

வெவ்வேறு விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பலியாகினர்.

Update: 2019-02-10 22:00 GMT
ஓசூர், 

ஆந்திர மாநிலம் குண்டூர் தாலுகா பேட்டகொரக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி மல்லா சிவய்யா (வயது 53). இவர் பாகலூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் மொபட்டில் பாகலூர் - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் உள்ள தடுப்பு கல்லில் எதிர்பாராதவிதமாக மொபட் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஆர்த்தி மல்லா சிவய்யா சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து பாகலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பர்கூர் அருகே உள்ள ஜெகதேவி பக்கமுள்ளது வேடர் கொட்டாய். இந்த ஊரை சேர்ந்தவர் சீனன் (68). சம்பவத்தன்று இவர் வேலம்பட்டி - சந்தூர் சாலையில் வேடர் தட்டக்கல் பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நபர் சீனன் மீது எதிர்பாராதவிதமாக மோதினார்.

இதில் பலத்த காயம் அடைந்த சீனனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சீனன் இறந்தார். இது குறித்து போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்