எடியூரப்பா பேரம் பேசியதாக வெளியான ஆடியோ, குரல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் மந்திரி எம்.பி.பட்டீல் பேட்டி
ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.வின் மகனுடன் எடியூரப்பா பேரம் பேசியதாக வெளியான ஆடியோ, குரல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மந்திரி எம்.பி.பட்டீல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
உப்பள்ளியில் நேற்று போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வின் மகனுடன் எடியூரப்பா பேரம் பேசும் ஆடியோவை முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ளார். எம்.எல்.ஏ. மகனுடன் தான் பேசவில்லை, ஆடியோவில் இருப்பது தனது குரல் இல்லை என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார். ஆடியோ வெளியான விவகாரத்தை கூட்டணி அரசு தீவிரமாக கையில் எடுத்துள்ளது. உள்துறையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த விவகாரத்தில் சபாநாயகர் ரமேஷ்குமாரின் பெயரும் இழுக்கப்பட்டுள்ளது. அதுபற்றி அவர் கருத்து தெரிவித்துள்ளார். சபாநாயகர் ரமேஷ்குமாரே ஆடியோ தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்புள்ளது.
அதற்கு முன்பாக எடியூரப்பா பேசியதாக வெளியான ஆடியோ ஆதாரங்கள் குரல் பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு ஆடியோவை முழுமையாக ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை கொடுப்பார்கள். அந்த அறிக்கை கிடைத்த பின்பு உண்மை வெளிச்சத்திற்கு வரும். அறிக்கை வந்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என்று பா.ஜனதாவினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். பா.ஜனதாவின் முயற்சி ஒரு போதும் வெற்றிபெற போவதில்லை. கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. முதல்-மந்திரி குமாரசாமி சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்காமல் புறக்கணித்து வருகின்றனர். 4 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டலில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து செல்போன் பறிக்கப்பட்டு இருக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாத 4 பேர் மீதும் மேலிட தலைவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.