சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2019-02-08 22:45 GMT
தாமரைக்குளம், 

அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சு, ஓவியம், வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 319 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 6 முதல் 8, 9 முதல் 12-ம் வகுப்பு வரை என 2 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பொய்யாமொழி, செந்தில் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற 18 மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.2 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.ஆயிரம், 3-ம் பரிசு ரூ.500 வழங்கப்பட்டது. மேலும் போட்டிகளில் வெற்றிப்பெற்ற 18 மாணவ- மாணவிகளுக்கும், அவர்களின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் ஒருநாள் இயற்கை சுற்றுலா அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் செல்வராசு, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்