மனு தர்ம சாஸ்திர நகல் எரிக்க முயன்ற 17 பேர் கைது

திராவிடர் கழகத்தின் சார்பில், மனு தர்ம சாஸ்திர நகல் எரிப்பு போராட்டம் நேற்று புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

Update: 2019-02-07 22:30 GMT
புதுக்கோட்டை,

திராவிடர் கழகத்தின் சார்பில், மனு தர்ம சாஸ்திர நகல் எரிப்பு போராட்டம் நேற்று புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, நேற்று திராவிடர் கழகத்தினர் மனு தர்ம சாஸ்திர நகல் எரிப்பு போராட்டம் நடத்த சின்னப்பா பூங்காவிற்கு வந்தனர். இதற்கு மண்டல தலைவர் ராவணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் அறிவொளி, மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மனு தர்ம சாஸ்திர நகலை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கணேஷ்நகர் போலீசார் மனு தர்ம சாஸ்திர நகலை எரிக்க முயன்ற திராவிடர் கழகத்தினர் 17 பேரை கைது செய்து, புதுக்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்