இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் இந்து முன்னணிசார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்த பா.ம.க. நகர செயலாளர் ராமலிங்கம் அப்பகுதியில் நடந்த மத மாற்றத்தை தட்டி கேட்டதால் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் இந்து முன்னணிசார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் மர்ம நபர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக இந்து முன்னணி நகர தலைவர் மணிகண்டன் தலைமையில், ராமலிங்கம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் இந்து முன்னணி மாவட்ட கோட்ட பொறுப்பாளர் குணா, மாவட்ட செயலாளர் ராசா, மாவட்ட துணை தலைவர் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் பழனிசாமி, ஒன்றிய தலைவர் அய்யம்பெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.